உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுார் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி துவக்கம்

ஸ்ரீபெரும்புதுார் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி துவக்கம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஆதி கேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில், 2025- - 26ம் ஆண்டிற்கான அர்ச்சகர் பயிற்சி பள்ளியில், மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளன. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், 2025- - 26ம் ஆண்டிற்கான அர்ச்சகர் பயிற்சி பள்ளி துவங்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதன் பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சி காலத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 10,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். சேர்க்கை விண்ணப்பங்களை https:/hrce.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ