உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டேக் வாண்டோ போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசு

டேக் வாண்டோ போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பல்லவர் டேக் வாண்டோ அமைப்பின் சார்பில், சிறப்பு தேர்வு போட்டி, அமைப்பின் செயலர் கணேஷ் தலைமையில் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. இந்த அமைப்பின் மூத்த பயிற்றுனர்கள் சரவணன், தங்கவேல் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடந்த இப்போட்டியில், 55 மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழ் மற்றும் பட்டை வழங்கப்பட்டன. அஜித்குமார், தீபக் சரத், யுவஸ்ரீ, வசந்தகுமார் போட்டியை நடத்தினர். இதில் பங்கேற்ற வீரர்களுக்கு, தற்காப்பு கலை பற்றியும், உடல் ஆரோக்கியம், மனவலிமை, நினைவு திறன் பற்றிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ