உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  அரசு பஸ் நிறுத்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 அரசு பஸ் நிறுத்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

படப்பை: கரசங்காலில் அரசு பேருந்து நிற்காததை கண்டித்து, பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை அருகே கரசங்கால் ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து தடம் எண்: 79 நின்று பயணியரை ஏற்றி செல்ல, போக்குவரத்து துறை மற்றும் காஞ்சிபுரம் கலெக்டர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், தடம் எண்: 79 பேருந்து, கரசங்கால் நிறுத்தத்தில் நிற்காததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், கரசங்கால் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், கரசங்காலில் தடம் எண்: 79 பேருந்து நின்று செல்லும் என, உறுதியளித்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ