தீப் திருவிழாவிற்கு வஸ்திரம் வழங்கல்
காஞ்சிபுரம்,: திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு, காஞ்சிபுரம் திருவண்ணாமலை கிரிவலக் குழு சார்பில், வஸ்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான கார்த்திகை தீபப் பெருவிழா, டிச.,13ம் தேதி நடைபெறுகிறது.இவ்விழாவிற்கு, காஞ்சிபுரம் திருவண்ணாமலை கிரிவலக் குழு சார்பில், 21வது ஆண்டாக, கிரிவலக் குழுவின் செயலர், எஸ்.டி.கங்காதரதன் தலைமையில், அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கான வஸ்திரங்களை, காஞ்சிபுரத்தில் இருந்து எடுத்துச் சென்று, திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் அலுவலகத்தில் நேற்று முறைப்படி வழங்கினர்.