உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் உபகரணங்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் உபகரணங்கள் வழங்கல்

காஞ்சிபுரம், தேசிய பாரா வாள் வீச்சு போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு, விளையாட்டு உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து, ஜூலை- 4ம் தேதி முதல், ஜூலை- 7ம் தேதி வரையில், சென்னை, கிண்டி, சிட்கோ தொழில்நுட்ப பூங்காவில் தேசிய பாரா வாள் வீச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.இந்த போட்டிக்கு செல்லும் 7 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலமாக, 2.31 லட்சம் ரூபாய் செலவில், 12 விதமான வாள் வீச்சுப் பொருட்களைகலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார்.மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ