உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாகாணியம் சாலையோர குளத்திற்கு தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு

மாகாணியம் சாலையோர குளத்திற்கு தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையில், மலைப்பட்டில் இருந்து, மாகாணியம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. மாகாணியம், அழகூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் இந்த சாலையின் வழியாக, ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.தவிர, பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பல்வேறு தேவைக்காக என, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றனர்.இந்த சாலையில், மலைப்பட்டு கங்கையம்மன் கோவில் அருகில், கோவில் குளம் உள்ளது. இந்த சாலையோர குளத்திற்கு தடுப்பு இல்லை.இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் எதிர்பாராத விதமாக, குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிடும் போது, குளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.இரவு நேரங்களில் போதி வெளிச்சமின்றி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் அதிகரித்து உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், குளத்தின் அருகில் உள்ள சாலையோரம் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !