உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 2 ஆண்டாக திறக்கப்படாத பொது கழிப்பறை கட்டடம்

2 ஆண்டாக திறக்கப்படாத பொது கழிப்பறை கட்டடம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கைலாசநாதர் கோவில் தெருவில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இப்பகுதிவாசிகள் மட்டுமின்றி, கைலாசநாதர் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களும், இந்த கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.கழிப்பறை திறக்கப்பட்டு ஒரு சில ஆண்டு மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன்பின், கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை குழாயில் அமைக்கப்பட்ட மின்மோட்டார் பழுதடைந்தது.மின்மோட்டாரை பழுதுநீக்கம் செய்து, கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, 2022 - -23ம் ஆண்டு சமுதாய கழிப்பறை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், கழிப்பறை கட்டடம் இரு ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. ஆனால், பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் பூட்டியே கிடப்பதால் வீணாகி வருகிறது. எனவே, கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை