உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பம்ப் ஆப்பரேட்டர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு

பம்ப் ஆப்பரேட்டர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இந்த பணியாளர்களுக்கு, ஏழாவது ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்கவில்லை. துாய்மை பணியாளர்களுக்கும், ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்க வேண்டும். குழு காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், தாமதமாக நடவடிக்கை எடுக்கின்றனர்.கலெக்டர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குனரிடம் பலமுறை மனு அளித்தும், கோரிக்கைகள் மீதான நடவடிக்கை எடுக்கவில்லை. ஜன., 3ம் தேதிக்குள் சங்க நிர்வாகிகளின் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால், பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும் என, பம்ப் ஆப்பரேட்டர் சங்கம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ