மாணவர்கள் சேர்க்கைக்கு க்யூ.ஆர்., குறியீடு பதாகை
திருப்புட்குழி, காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மாணவர்கள் சேர்க்கைக்கு, க்யூ.ஆர்., குறியீடு வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, பதாகை அமைக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக, வீட்டில் இருந்தே உங்கள் குழந்தைகளை திருப்புட்குழி துவக்கப் பள்ளியில் சேர்க்கலாம் என, அறிவித்திருப்பது கிராமப்புற மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.