உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காலிமனையில் மழைநீர் தேக்கம் ஐஸ்வர்யம் நகரில் கொசு தொல்லை

காலிமனையில் மழைநீர் தேக்கம் ஐஸ்வர்யம் நகரில் கொசு தொல்லை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையோரம் உள்ள ஐஸ்வர்யம் நகரில், வீடுகளுக்கு மத்தியில் உள்ள காலிமனையில் தேங்கியுள்ள மழைநீர் பாசி படர்ந்த நிலையில் உள்ளது. தேங்கியுள்ள மழைநீரால் இப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, காலி மனையில், தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தவும், இப்பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ