உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ராமலிங்கேஸ்வரர் கோவில் நிலம் ரூ.29,500க்கு குத்தகை ஏலம்

 ராமலிங்கேஸ்வரர் கோவில் நிலம் ரூ.29,500க்கு குத்தகை ஏலம்

காஞ்சிபுரம்: ராமலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விளை நிலத்தின் மூலம், 29,500 ரூபாய் குத்தகை ஏல வருவாய் கிடைத்துஉள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜாம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 15க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், புத்தகரம், கள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில், விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை, ஆண்டுதோறும் சாகுபடி செய்வதற்கு குத்தகைக்கு விடப்படப்படுகிறது. நடப்பாண்டு குத்தகை, செயல் அலுவலர் ராஜமாணிக்கம் மற்றும் ஹிந்து சமய அறநிலைய துறை சரக ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் ஏலம் விட்டனர். இந்த ஏலத்தின் மூலம், 29,500 ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மேலும், ஐந்து ஏக்கருக்கு ஓரிரு வாரங்களில் குத்தகை ஏலம் விடப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை