உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் - தாம்பரம் பேருந்து சேவை குறைப்பு

உத்திரமேரூர் - தாம்பரம் பேருந்து சேவை குறைப்பு

காஞ்சிபுரம்:உத்திரமேரூரில் இருந்து திருப்புலிவனம், குண்ணவாக்கம், சாலவாக்கம், செங்கல்பட்டு, தாம்பரம் வரையில், தடம் எண்: டி - 504எஸ் என்ற அரசு பேருந்து சேவை, கடந்த ஜனவரியில் துவக்கப்பட்டது.இந்த பேருந்து, தாம்பரத்தில் இருந்து காலை 10:00 மணிக்கு புறப்பட்டு, உத்திரமேரூருக்கு காலை 11:45 மணிக்கு வந்தடையும்.பகல் 12:00 மணிக்கு உத்திரமேரூரில் இருந்து புறப்பட்டு, மதியம் 1:45 மணிக்கு தாம்பரம்செல்லும்.அதே பேருந்து, பகல், 2:15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மாலை, 4:00 மணிக்கு உத்திரமேரூர் வந்தடையும். மாலை, 4:10 மணிக்கு உத்திரமேரூரில் இருந்து புறப்பட்டு, மாலை 5:00 மணிக்கு செங்கல்பட்டுக்கு வந்தடையும். மாலை 5:15 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு, உத்திரமேரூருக்கு மாலை 6:00 மணிக்கு வந்தடையும்.இந்த பேருந்து சேவை வாயிலாக திருப்புலிவனம், குண்ணவாக்கம், சாலவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ - -மாணவியர் மற்றும் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக, பகல் சேவை முழுதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பேருந்து, காஞ்சிபுரம் - -தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப் படுகிறது.இதனால், உத்திர மேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் மற்றும்தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்பட்டுவருகின்றனர்.எனவே, உத்திரமேரூர்- - தாம்பரம் வழித்தடத்தில் குறைக்கப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ