உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரத்தில் சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றம்

காஞ்சிபுரத்தில் சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் ‛பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த மழைக்கு, உப்புகுளம் பகுதியில் குடியிருப்பை சூழந்த மழைநீர் வெளியேறாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று பெய்த மழைக்கே அப்பகுதியில் மழைநீர் மேலும் அதிகரித்துள்ளது.காஞ்சிபுரம் மாமல்லன் நகர் ஒட்டியுள்ள, குட்டை நிரம்பியதால், குட்டையில் இருந்து வெளியேறிய உபரிநீர் மின் நகரை சூழந்தது. இதனால், கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், இரு ஆயில் இன்ஜின் மோட்டார் வாயிலாக மழைநீர் மஞ்சள் நீர்கால்வாயில் வெளியேற்றப்பட்டது.காஞ்சிபுரத்தில் நேற்று காலை பெய்த பலத்த மழை காரணமாக மேட்டுத்தெரு - கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு சந்திப்பில் மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் குளம்போல மழைநீர் தேங்கியது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கினர்பூக்கடைசத்திரம் அருகில், சாலையோர கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் கால்வாய் அடைப்பை சீரமைத்தனர்.காஞ்சிபுரம் ஆனந்தாபேட்டை வழியாக திருக்காலிமேடு பிரதான சாலையில் தேங்கிய மழைநீராலும், காஞ்சிபுரம் ரயில்வே சாலை, அசோக் நகர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். காஞ்சிபுரம் வைகுண்டபுரம் விரிவாக்கம் பகுதியில் உள்ள பூங்காவில் மழைநீர் தேங்கியுள்ளதால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை