உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செவிலிமேடு பாலாறு பாலத்தில் சேதமான சாலை சீரமைப்பு

செவிலிமேடு பாலாறு பாலத்தில் சேதமான சாலை சீரமைப்பு

செவிலிமேடு:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடிற்கும், -புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கும் இடையே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பால சாலையில், ஆங்காங்கே தார்கலவை பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டு இருந்தது.தெரு மின்விளக்கு வசதி இல்லாத இப்பாலத்தில், இரவு நேரத்தில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் ஏற்பட்ட பகுதியில், நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினர். இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.இதையடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், செவிலிமேடு பாலற்று பாலத்தில் சேதமடைந்த சாலையை ரெடிமேட் தார் கலவை வாயிலாக 'பேட்ச் ஒர்க்' பணியாக நேற்று சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை