உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் குளத்தை துார்வார கோரிக்கை

கோவில் குளத்தை துார்வார கோரிக்கை

உத்திரமேரூர்:அப்பையநல்லுார் மாரியம்மன் கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் ஊராட்சியில், அப்பையநல்லூர் துணை கிராமம் உள்ளது. இங்கு, புத்தளி செல்லும் சாலையோரத்தில் மாரியம்மன் கோவில் குளம் உள்ளது.இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தின் கரையில் அப்பகுதி மக்கள், இறந்தவர்களின் ஈமச்சடங்குகளை செய்து வந்தனர்.தற்போது, குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தின் கரையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், குளத்தில் விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன.எனவே, அப்பையநல்லுார் மாரியம்மன் கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ