அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்த கோரிக்கை
கப்பாங்கோட்டூர்:மதுரமங்கலம் அடுத்த, கப்பாங்கோட்டூர் கிராமத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் மழலையர் கல்வி கற்று வருகின்றனர்.இந்த குழந்தைகளுக்கு தேவையான மதிய உணவு தயாரித்து அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படுகிறது. இந்த மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு தற்காலிக கம்பி வலையால், தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கம்பிகளின் ஒட்டை வழியாக விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இதனால், அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு ஆபத்தாக உள்ளது.எனவே, கப்பாங்கோட்டூர் அங்கன்வாடி மையத்திற்கு நிரந்தர சுற்றுச்சுவர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.