உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மேனல்லுாரில் சமுதாய கூடம் அமைக்க கோரிக்கை

மேனல்லுாரில் சமுதாய கூடம் அமைக்க கோரிக்கை

உத்திரமேரூர்:மேனல்லுார் கிராமத்தில் சமுதாய கூடம் கட்ட வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியத்தில் மேனல்லுார் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் கூலி வேலை செய்வோர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்குள்ள மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை உத்திரமேரூர், மானாம்பதி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். தனியார் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதால், அதிக செலவு ஏற்படுகிறது. மேலும், அதிக துாரமாக பயணித்து செல்லும்போது கிராம மக்கள் வீண் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, மேனல்லுாரில் உணவு பரிமாறும் இடம் மற்றும் சமையல் தயாரிப்பு கூடம் ஆகிய வசதிகளுடன், சமுதாய கூடம் கட்ட, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை