உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி அரசு இ - சேவை மையத்தில் கூடுதல் கவுன்டர்கள் திறக்க கோரிக்கை

காஞ்சி அரசு இ - சேவை மையத்தில் கூடுதல் கவுன்டர்கள் திறக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள அரசு இ - சேவை மையத்தில், பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க அன்றா=டம் ஏராளமானோர் வருவதால், கூடுதல் கவுன்டர்கள் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அரசு இ - சேவை மையம் இயங்கி வருகிறது. தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனம் கீழ் இயங்கும் இந்த இ - சேவை மையத்தில், ஆதார் பதிவு, திருத்தம், ஜாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்று என பல வகையான சான்றுகள் கோரி விண்ணப்பிக்கின்றனர். ஏராளமானோர் இங்கு வருவதால், காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்கின்றனர். ஒரு நாளைக்கு 40 - - 50 பேருக்கு மட்டும் டோக்கன் கொடுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விண்ணப்பிக்க முடிகிறது. ஆதார் மற்றும் விண்ணப்பங்கள் பதிவுக்கு தலா ஒரு கவுன்டர் மட்டுமே இருப்பதால், பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், இந்த இ - சேவை மையத்தில் கூடுதல் கவுன்டர் திறக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !