மாயமாகி வரும் கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய், கோவிலின் வடக்கு பகுதி வழியாக செல்கிறது.இக்கால்வாயை முறையாக துார்வாரி பராமரிக்காததால், எல்லப்பா அவென்யூ பகுதி வழியாக செல்லும் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.இதனால், கால்வாயில் மழைநீர் முழுமையாக வெளியேறாமல், ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால், பாசி படர்ந்த நிலையில் உள்ளது. இதனால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், அதிக மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழும் நிலை உள்ளது. எனவே, மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.