உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தெற்கு மாடவீதி நடைபாதை சீரமைக்க கோரிக்கை

தெற்கு மாடவீதி நடைபாதை சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தெற்கு மாட வீதியில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் மீது, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையின் கீழ், மழைநீர் கால்வாய்மீது போடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப் உடைந்துள்ளதால், கால்வாய் திறந்து உள்ளது.இதனால், நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, நடைபாதையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினரிடம் கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ