உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 338 பேருக்கு குடியிருப்பு ஆணை வழங்கல்

338 பேருக்கு குடியிருப்பு ஆணை வழங்கல்

படப்பை:குன்றத்துார் ஒன்றியம், சாலமங்கலம் ஊராட்சியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 51.50 கோடி ரூபாய் மதிப்பில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய அடுக்குமாடியில், 420 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.இதை, கடந்த மே மாதம், தமிழக முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 338 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, குடியிருப்பை திறந்து வைத்தார்.அதேபோல் படப்பை அருகே நாவலுார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து கூடுதல் வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை