உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் திட்டங்கள் இன்றி குடியிருப்புவாசிகள் அவதி

குடிநீர் திட்டங்கள் இன்றி குடியிருப்புவாசிகள் அவதி

காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் அடுத்த விஜயா கார்டன் பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் இன்றி குடியிருப்புவாசிகள் அவதிபடுகின்றனர்.வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், விஜயா கார்டன், ஜெ.எஸ்., நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. புதிதாக உருவாகியுள்ள நகர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் வினியோக கட்டமைப்பு உருவாக்கவில்லை. இது தவிர, கான்கிரீட் சாலைகளும் போடவில்லை.குறிப்பாக, பழங்குடியினத்தவர்களின் குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகு குறைவாக இருப்பதால், தனி ஆழ்துளை கிணறு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற இடங்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதை ஊராட்சி நிர்வாகம் செயல்படுத்த எவ்வித முனைப்பு காட்டவில்லை என, குடியிருப்புவாசிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, விஜயா கார்டன் பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு நகர்களில் கூட்டு குடிநீர் திட்ட கட்டமைப்பு மற்றும் கான்கிரீட் சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ