உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பணிதள பொறுப்பாளர்களை பணி நிரந்தரம் செய்ய தீர்மானம்

பணிதள பொறுப்பாளர்களை பணி நிரந்தரம் செய்ய தீர்மானம்

வாலாஜாபாத்:''ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயணியாற்றும் பணிதள பொறுப்பாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,'' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் வாழ்வாதரா பொது நல சங்கம் பேரவை கூட்டம் வாலாஜாபாதில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் பாரதி தலைமை தாங்கினார். வளர்ச்சியடைந்த ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள 125 நாள் வேலை நாட்களை 150 நாட்களாக அதிகரித்திட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணிதள பொறுப்பாளர்களை, 125 நாள் முடிவில் பணி நீக்கம் செய்யாமல் நிரந்தர பணிதள பொறுப்பார்களாக நியமனம் செய்ய வேண்டும். 125 நாள் பணியாளர்களுக்கு பச்சை நிறத்திலான சீருடை வழங்கி ஆண்டுக்கு நான்கு செட் சீருடை அளிக்க வேண்டும். பணியின் போது எதிர்பாராமல் தற்காலிகமாக உடலில் ஊனம் ஏற்பட்டால் 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பணியின்போது தொழிலாளர்களுக்கு மரணம் ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு நிவராண நிதியாக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மாநில செயலர் ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் முரளி, பொறுப்பாளர்கள் செந்தில்குமார், வஜ்ஜிரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !