அதிவிரைவு சாலை பணிக்கு சேதப்படுத்திய ஏரிக்கரை சீரமைப்பு
காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணி, 50 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், கூத்தவாக்கம், கோவிந்தவாடி, சிறுவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், உளியநல்லுார், மகேந்திரவாடி ஆகிய பிரதான ஏரிகளின் நடுவே ராட்சத பில்லர்கள் அமைத்து, சாலை இணைப்பு ஏற்படுத்தும் பணி துவக்கப்பட்டு உள்ளன.கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை முடிந்த பின், ஏரிக்கரைகளை சேதப்படுத்தி கட்டுமான பணிகளை அதிவிரைவு சாலை போட ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் செய்து வருகிறது.வடகிழக்கு பருவ மழை துவங்க இருப்பதால், சேதமடைந்த ஏரிக்கரைகளை சீரமைக்கும் பணியை அதிவிரைவு சாலை போடும் ஒப்பந்த நிறுவனம் செய்து வருகிறது.இதில், கோவிந்தவாடி ஏரிக்கரையை, ராட்சத இயந்திரங்களின் வாயிலாக, இரவேடு இரவாக கரை பலப்படுத்தப்பட்டு உள்ளது.இனிமேல், வட கிழக்கு பருவ மழைக்கு தண்ணீர் தேங்கி வைப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என, நீர் வள ஆதாரத் துறையினர் தெரிவித்தனர்.