உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பன்றிகளால் ஏரி நீர் மாசு நோய் பரவும் அபாயம்

பன்றிகளால் ஏரி நீர் மாசு நோய் பரவும் அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கள்ளிப்பட்டு கிராமத்தில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நிரம்பும் நீரால், 125 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், தாமரை பூக்களின் வாயிலாக கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர். தற்போது, கள்ளிப்பட்டு ஏரியில், நீரின் இருப்பு குறைவாக உள்ளது.இந்த தண்ணீரை, ஏரி நீர்பிடிப்பு அல்லாத பகுதியில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் குடித்து வந்தன. சமீபத்தில், ஏரி நாணலில் வளர்ந்த பன்றிகள், ஆடு, மாடு குடிக்கும் நீரில் குளித்தும், சேற்றில் புரண்டும் சுற்றித் திரிவதால், தண்ணீர் மாசு ஏற்பட்டுள்ளது.மேலும், நோய் பரவும் அபாயம் உள்ளது என, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.எனவே, ஏரி நீர் மாசடையாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை