உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை சீரமைப்பு பணி குன்றத்துாரில் நெரிசல்

சாலை சீரமைப்பு பணி குன்றத்துாரில் நெரிசல்

குன்றத்துார்:பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் இருந்து, குன்றத்துார் செல்லும் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான பள்ளி, கல்லுாரி வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்கின்றன.குறுகலான சாலையால், இங்கு தினமும் பகல் நேரங்களில், கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், இந்த சாலையில், குன்றத்துார் அருகே மாங்காடு, சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம் ஆகிய பகுதிகளில், சேதமான சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த பணிகள், பகல் நேரத்தில் நடைபெறுவதால், நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சாலை சீரமைப்பு பணிகளை, இரவு நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ