மேலும் செய்திகள்
குறுகலான சாலையில் வாகனங்கள் செல்வதில் சிக்கல்
25-Mar-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து, புக்கத்துறை செல்லும் சாலை 18 கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி, 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செங்கல்பட்டு, புக்கத்துறை, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில் உள்ள தளவாரம்பூண்டி பகுதியில், சாலையோரத்தில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த பேனர்களால், தளவாரம்பூண்டியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலையில் திரும்பும்போது, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது.இதனால், அப்பகுதியில் எதிர்பாராதவிதமாக வாகன விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, தளவாரம்பூண்டிக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, நெடுஞ்சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள, பேனர்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினருக்கு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Mar-2025