சாலையோர இரும்பு தடுப்பு சேதம் வாகனங்கள் கவிழும் அபாயம்
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூர் கிராமத்தில் இருந்து, அசநெல்லிகுப்பம் கிராமம் வழியாக, நெமிலி செல்லும் பிரதான சாலை உள்ளது.இச்சாலையில், திருமால்பூர், நெல்வாய் கண்டிகை, நெல்வாய், அசநெல்லிகுப்பம் ஆகிய கிராமங்களில், குறுகிய சாலை வளைவுகள் உள்ளன.சாலையோரம், 3 அடி ஆழத்திற்கு வயல்கள் தாழ்வாக உள்ளன. இந்த வயலயோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விடக்கூடாது என, சாலையின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.இந்த தடுப்பு சேதம் ஏற்பட்டு, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சாலையோர தடுப்பு மீது, வாகனம் லேசாக மோதினால்கூட விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சாலையோரம் சேதம் ஏற்பட்டு இருக்கும் தடுப்பு சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.