உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரவுடி குண்டாசில் கைது

ரவுடி குண்டாசில் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செவிலிமேடு, பல்லவன் குறுக்குபாட்டை தெருவைச் சேர்ந்தவர் ஆதி, 20; சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா என, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.குற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம், காஞ்சிபுரம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதன்படி, கலெக்டர் கலைச்செல்வி, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். சிறையில் உள்ள ஆதியிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ