மேலும் செய்திகள்
இட நெருக்கடியில் தவிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்
23-Jan-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கணினி ஆய்வகம் இல்லாததால், மாணவர்களுக்கு டிஜிட்டல் வடிவ கற்றல் முறையை செயல்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. எனவே, இப்பள்ளிக்கு கணினி ஆய்வக கட்டடம் கட்ட, மாணவர்களின் பெற்றோர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், புதிய கணினி ஆய்வக கட்டடம் கட்ட, 2024 --- 25ம் நிதியாண்டில், நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், 17.30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் துவக்கப்படும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
23-Jan-2025