உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதிய ரேஷன் கடை கட்ட ரூ.17.80 லட்சம் ஒதுக்கீடு

புதிய ரேஷன் கடை கட்ட ரூ.17.80 லட்சம் ஒதுக்கீடு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில், அப்பகுதியைச் சேர்ந்த 655 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை பெற்று, பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கடை கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து இருந்தது.மழை நேரங்களில் தண்ணீர் சொட்டுவதால் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வீணாகின. எனவே, பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி வாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, 2024 --- 25ம் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 17.80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதிய ரேஷன் கடை கட்டும் பணிகளை, விரைந்து துவங்க உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ