உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிமென்ட் சாலை அமைக்க ரூ. 20.11 லட்சம் ஒதுக்கீடு

சிமென்ட் சாலை அமைக்க ரூ. 20.11 லட்சம் ஒதுக்கீடு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் குண்ணவாக்கம் ஊராட்சியில், 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில், சில ஆண்டுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.தற்போது, இரு தெருக்களில் உள்ள சிமென்ட் சாலை சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளன. இதை சீரமைக்க அப்பகுதிவாசிகள், ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, புதிய சிமென்ட் சாலை அமைக்க, ஊராட்சி நிர்வாகத்தின் தீர்மானத்தின் படி, 2023 --- 24ம் நிதியாண்டில் கனிமவள நிதி திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைந்து துவக்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை