பொற்பந்தலில் நிழற்குடை அமைக்க ரூ.6.32 லட்சம் ஒதுக்கீடு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் கிராமத்தில், சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது.இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி, அப்பகுதிவாசிகள் சாலவாக்கம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.தற்போது, பயணியர் நிழற்குடை முறையாக பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்து உள்ளது. இதனால், பயணியர் நிழற்குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றி, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க கிராமத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், உத்திரமேரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 6.32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தற்போது, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக சுந்தர் உள்ளார். இந்த புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளதாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.