ம.தி.மு.க., பிரமுகர் மீது ரூ.94 லட்சம் மோசடி புகார்
கூடுவாஞ்சேரி,வண்டலுார் அடுத்த மதனபுரி கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 45. இவர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில் தெரிவித்ததாவது:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊனமாஞ்சேரியைச் சேர்ந்தவர் பார்த்திபன்; செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட ம.தி.மு.க., செயலர். இவரது மனைவி ரெஜினா. இவர்கள் வீட்டு மனை எண்: 66யை, 94.50 லட்சம் ரூபாய்க்கு விலை பேசினர்.இந்த தொகையை, கடந்த 2022ம் ஆண்டு, ஐந்து தவணைகளாக அவரது வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளேன். ஆனால், மனையை என் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து தராமல் ஏமாற்றி வருகின்றனர்.இதுதொடர்பாக கேட்கும் போது, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.