மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்த வடமாநிலத்தவர் கைது
17-Oct-2024
காஞ்சிபுரம்:குட்கா விற்றதாக இரண்டு இடங்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் கோவிந்தவாடி கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது./ அதையடுத்து, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சுதாகர், 28, என்ற வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.அதேபோல, சுங்குவார்சத்திரம் அருகே, சிறுமாங்காடு பகுதியில், குட்கா விற்பனை ஈடுபடுவோரை பிடிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பெட்டி கடைகளில் குட்கா விற்பனை செய்ததாக, லோகு, 65, முருகன், 57, ஆகிய இருவரையும் சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
17-Oct-2024