உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கர லிங்கனார் சித்தர் குருபூஜை விழா விமரிசை

சங்கர லிங்கனார் சித்தர் குருபூஜை விழா விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த, சங்கர லிங்கனார் சித்தரின், ஜீவசமாதி சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெரு, பணாமணீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அனந்ததீர்த்த குளத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் சங்கர லிங்கனார் சித்தரின் ஜீவ சமாதியில் வழிபட்டு வருகின்றனர்.ஐப்பசி மாதம் பஞ்சமி திதியான நேற்று, சங்கர லிங்கனார் சித்தரின் குருபூஜை விமரிசையாக நடந்தது. இதில், காலை 9:00 சிறப்பு யாகமும், தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி