உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாடில்லாத குடிநீர் தொட்டியை இடிக்க சாத்துார் மக்கள் கோரிக்கை

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டியை இடிக்க சாத்துார் மக்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்: காந்துார் ஊராட்சியில், கோவில் அருகே பல ஆண்டுகளாக பயன்பாட்டு இல்லாமல் சிதிலமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், காந்துார் ஊராட்சிக்குட்பட்ட, மேட்டுக்காந்துாரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவில் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதில் இருந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த குடிநீர் தெட்டி, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. இதையடுத்து, அதே பகுதியில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. கோவில் அருகே உள்ள தொட்டி சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து வருகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, பயன்பாடு இல்லாமல், சிதிலமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என, சாத்துார் ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை