உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ‘விளை நிலங்கள் காப்போம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

‘விளை நிலங்கள் காப்போம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: கொட்டவாக்கம் ஊராட்சியில், ‛விளை நிலங்கள் காப்போம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (நவ.,25) நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் இசக்கியப்பன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இயற்கை விவசாயம் குறித்து, கொட்டவாக்கம், போந்தவாக்கம் கிராம விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், ரசாயன உரங்கள் போட்டு சாகுபடி செய்யும் விவசாயிகள், வேளாண் துறையினர் பரிந்துரைக்கும் அளவு ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில், விதை சான்றளிப்பு துறை அலுவலர் பிரபாகர், துணை வேளாண் அலுவலர் மகாதேவன், உதவி வேளாண் அலுவலர் வேதாச்சலம் மற்றும் கொட்டவாக்கம், போந்தவாக்கம் கிராம விவசாயிகள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ