உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்நடை மருந்தகம் அமைக்க சீயமங்கலத்தினர் எதிர்பார்ப்பு

கால்நடை மருந்தகம் அமைக்க சீயமங்கலத்தினர் எதிர்பார்ப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது சீயமங்கலம் கிராமம். சீயமங்கலம் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள ஒட்டிவாக்கம், வெண்குடி, பூசிவாக்கம், கிதிரிப்பேட்டை, தாங்கி, வில்லிவலம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.இந்த கிராமங்களில், பால் உற்பத்திக்காக கறவை பசுக்கள் மற்றும் எருமை மாடுகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. மேலும், உழவு மாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.ஆனால், இங்கு கால்நடை மருந்தகம் இல்லாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் நோய்வாய்பட்டால், 5 கி.மீ., தூரத்தில் உள்ள அய்யம்பேட்டை அல்லது வாலாஜாபாத் போன்ற பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம் சென்று, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை தொடர்கிறது.இதனால், இப்பகுதி கால்நடை பராமரிப்போர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த கிராமங்களை மையமாக கொண்டு, சீயமங்கலம் கிராமத்தில் கால்நடை மருந்தகம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை