உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காலி இடத்தில் தேங்கும் கழிவுநீர் பால்நல்லுாரில் சுகாதார சீர்கேடு

காலி இடத்தில் தேங்கும் கழிவுநீர் பால்நல்லுாரில் சுகாதார சீர்கேடு

ஸ்ரீபெரும்புதுார்:பால்நல்லுார் ஊராட்சியில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையோரத்தில் உள்ள காலி இடத்தில் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பால்நல்லுார் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதே போல, வல்லம் -வடகால், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள், இப்பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பால்நல்லுார் சாலையோரத்தில் பாசி படர்ந்து குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மழை பெய்யும் போது, சாலையோரம் தேங்கியுள்ள கழிவுநீர், அருகே உள்ள ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரி நீரும் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, முறையாக அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை