மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
23-Apr-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு, மூன்றாவது குறுக்கு கவரை தெருவில், வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால், அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய கழிவுநீர், கால்வாயில் இருந்து நிரம்பி வழிந்து, காலிமனையில் தேங்குகிறது.ஒரே இடத்தில் தேங்கும் கழிவுநீரால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளதுதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, திருக்காலிமேடு மூன்றாவது குறுக்கு கவரை தெரு வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
23-Apr-2025