வடிகால்வாய் வசதி இல்லாததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எச்சூர் ஊராட்சி, காளியம்மன் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற வடிகால்வாய் வசதி அமைக்கப்படவில்லை.வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திறந்தவெளியில் வெளியேறி சாலையில் வடிந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.மேலும், வடிகால்வாய் வசதி இல்லாதால், மழை காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து, வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, எதிர் வரும் பருவ மழைக்குள், காளியம்மன் கோவில் தெருவில், வடிகால்வாய் வசதி அமைக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.