உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடையில் அடைப்பு கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

பாதாள சாக்கடையில் அடைப்பு கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் குளம்போல தேங்கியுள்ள கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, ரெட்டிபேட்டை தெரு வழியாக ராஜாஜி மார்க்கெட், வெங்கடேசபாளையம், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள ஆஞ்சநேயர் கோவில், விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. ஒரு வாரமாக சாலையில் தேங்கும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே, ரெட்டிபேட்டை தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை