உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்:பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், தலைமை அஞ்சலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ராஜாஜி காய்கறி மார்க்கெட், திருமண மண்டபம், சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க், மளிகை கடைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், டாஸ்மாக்கின், 'எலைட்' மதுபான கடை அருகே, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களும், பாதசாரிகளும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை