25 பேருக்கு தையல் மிஷன்
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி தலைமை வகித்தார்.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, சமூக பங்களிப்பு நிதியில், தையல் மிஷன்களை வழங்கினார். இதில், தனியார் தொழிற்சாலை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.