உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மந்த கதியில் சாலை பணி வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

மந்த கதியில் சாலை பணி வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

ஸ்ரீபெரும்புதுார்:பென்னலுாரில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு மந்த கதியில் நடந்து வரும் சாலை பணியால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பென்னலுார் துணை மின் நிலையம் அருகே இருந்து பிரிந்து செல்லும், பென்னலுார் சாலை 3.5 கி.மீ., துாரம் உடையது. பென்னலுார் கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி, ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் இணைப்பு சாலையாக விளங்கும் இந்த சாலை, பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2.98 கோடி ரூபாய் மதிப்பில், தார் சாலை அமைக்கும் பணி இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதையடுத்து, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், மந்த கதியில் நடந்து வரும் சாலை பணியால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சாலை பணிகளை விரைந்து முடிக்க, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பென்னலுார் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உடனுக்குடன் தார் ஊற்றினால், சாலை குறுகிய காலத்தில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, ஜல்லி கற்கள் சாலையுடன் 'செட்' ஆக வேண்டும். 'ரோட்ரோலர்' மூலம் ஜல்லி கற்களை மிதித்த பின், விரைவில் தார் ஊற்றி சாலை சீரமைக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை