மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தலில் இருவருக்கு வலைவீச்சு
14-Jun-2025
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அடுத்த, மதுரமங்கலம் அருகே, ஓ.எம்., மங்கலம் கிராமத்தில், சுங்குவார்சத்திரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கி விசாரித்தனர்.அதில், ஆவணமுமின்றி, ஓ.எம்., மங்கலத்தில் உள்ள கசனம் குட்டையில் இருந்து கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது.இதையடுத்து, கடத்தல் மண் ஏற்றிவந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டிவந்த அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 29, என்பவரை கைது செய்தனர்.
14-Jun-2025