உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சோலார் பேனல் விண்ணப்பம் வரவேற்பு

சோலார் பேனல் விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்,:பிரதமர் திட்டத்தில் நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளின் கூரைமீது, சோலார் பேனல்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக, ஒரு மாதம், 300 யூனிட் இலவச மின்சாரம் உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில், பயன்பெற விரும்பும் பயனாளிகள் pmsuryaghar.gov.inஎன்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.மேலும், https://pmsuryaghar.gov.inஎன்ற நேரடி இணைப்பை பயன்படுத்தி வீடுகளின் கூரை மீது, சோலார் பேனல்களை அமைத்து மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !