உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை சிறப்பு வழிபாடு

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை சிறப்பு வழிபாடு

ஸ்ரீபெரும்புதுார்:ஆவணி மாத கிருத்திகையையொட்டி, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் அருள்பாளிக்கிறார். இக்கோவிலில் ஆவணி மாத கிருத்திகை விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சஷ்டி மண்டபத்தில் உற்சவர் கோடையாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை