உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 78 இடங்களில் நடக்கிறது

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 78 இடங்களில் நடக்கிறது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசின் சேவைகள், திட்டங்களை மக்களுக்கு நேரடியாக வழங்கும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், வரும் 15ம் தேதி துவக்கப்பட உள்ளது.'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில், 69 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 155 முகாம்களும் என, மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இதில், முதற்கட்டமாக, ஜூலை 15 முதல், ஆகஸ்ட் 14 வரை நகர்ப்புற பகுதிகளில் 25 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 53 முகாம்களும் என, மொத்தம், 78 முகாம்கள் நடைபெறஉள்ளன.இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில், 13 அரசுத் துறைகளைச் சார்ந்த, 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில், 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.மேலும், இம்முகாம்களில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விபரங்கள், அங்கு வழங்கப்பட உள்ள பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் தெரிவித்து வருகின்றனர்.இந்த முகாம்களில். மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இருப்பின், முகாமில் விண்ணப்பம் அளிக்கலாம். மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம், முகாமில் மட்டுமே வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி